search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளான் வளர்ப்பு"

    • காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்தின் தலைவர்களான புஷ்ப லதா மற்றும் சரண் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-கன்னியாகுமரி ஊரக வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி நிலையம்) கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியில் காளான் விதை உற்பத்தி, வளர்ப்பு, மதிப்பு கூட்டுப்பொருட்கள் செய்தல், அவற்றின் சிறப்பு அம்சங்கள், தொழில் வாய்ப்புக்கு தேவையான நிதியை பெறுதல் தொடர்பா னவற்றில் செய்முறை வகுப்புகள் ரோகிணி பொறியியல் கல்லூரியிலும், மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்திலும் நடைபெற்றது.

    இதில் முதலாமாண்டு வேளாண் துறை மாண வர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் அடைந்தனர். மேலும் இந்த பயிற்சியின் மூலமாக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் காளான் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.
    • இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    ஈரோடு:

    பவானிசாகர் வட்டார த்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தொப்ப ம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறி யாளர் சண்முக சுந்தரம் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குநர் பிருந்தா காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சத்துகள் பற்றி எடுத்துறைத்தார். இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    கால்நடை மருத்துவர் முருகானந்தம் கால்நடை பராமரிப்பு பற்றி எடுத்து க்கூறினார். வீர லட்சுமிகாந்த் மற்றும் தமிழ்செல்வன், வேளாண் வணிகத்துறை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீப்குமார், மற்றும் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்ப ரசன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி பேசினர்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்புராஜ் நன்றி கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் வள்ளி பயிற்சி க்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்பயிற்சி யில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் முடிவில் காளான் வளர்ப்பிற்கான வழிமுறைகள் நேரடி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மழைக் காலங்களில் அதிக மகசூலும், கோடை காலத்தில் குறைந்த மகசூலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வழிகாட்டும் வகையில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமையில் ஆனைமலையையடுத்த பெரியபோது கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி கோபால் காளான் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கினார்.

    இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மழைக் காலங்களில் அதிக மகசூலும், கோடை காலத்தில் குறைந்த மகசூலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த பகுதிகளின் தேவை அறிந்து சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக்காளான் உள்ளிட்ட ராகங்களின் வளர்ப்பில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் சிறந்த லாபம் முதல் கட்டமாக சிறிய அளவில் உற்பத்தியைத் தொடங்கி தேவை அடிப்படையில் படிப்படியாக அதிகரிக்கலாம். உழவர் சந்தை உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக சந்தைப்படுத்துதல் கூடுதல் லாபம் தரும். தினசரி 2 மணி நேரம் ஒதுக்கி முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல மகசூல் ஈட்ட முடியும். குறைந்த அளவிலான முதலீட்டில் சிறந்த லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக காளான் வளர்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×